சினிமா

கபாலிக்கு கிடைக்காமல் போனதை கைப்பற்றிய மெர்சல்!

கபாலிக்கு கிடைக்காமல் போனதை கைப்பற்றிய மெர்சல்!

webteam

திரையுலகில் முதல் முறையாக ட்விட்டர் வலைதளத்தில் மெர்சல் படத்தின் எமோஜி உருவாக்கப்பட்டுள்ளது. 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது. அப்படத்தின் இரண்டாவது பாடலான நீதானே.. முழுப்பாடல் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளமான ட்விட்டரில் விஜய் ரசிகர்களுக்காக மெர்சல் Emoji வந்துள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இதற்கு முன் தமிழ் சினிமாவில் கபாலி படத்திற்கு எமோஜி வெளியிட முயற்சி செய்து கிடைக்காமல் போனதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவில் ஒரு திரைப்படத்திற்கு எமோஜி கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை. இந்நிலையில்  வரும் 20ம் தேதி மிகப்பிரம்மாண்டமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள இசை வெளியீட்டு விழாவை தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரம்யாவுடன் நடிகரும், விஜயின் நண்பருமான சஞ்சீவும் தொகுத்து வழங்க இருப்பதாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.