நிலாவை ஞாபகம் இருக்கிறதா? எஸ்.ஜே.சூர்யாவுடன் ’அ ஆ’படத்தில் அறிமுகமானாரே, அவரேதான். தொடர்ந்து ஜாம்பவான், லீ, மருதமலை, காளை உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்தார். தெலுங்கிலும் நடித்துவந்தார். சரியான வாய்ப்புகள் அமையாததால், இப்போது மீரா சோப்ரா என்ற தனது உண்மையானப் பெயரில் இந்தி படங்களில் நடித்துவருகிறார்.
இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, பரினீதி சோப்ரா ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரி. பிரியங்கா சோப்ரா இப்போது ஹாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். அவரைப் பின்பற்றி மீராவும் இப்போது ஹாலிவுட்டில் கவனம் செலுத்தத்தொடங்கியுள்ளார்.
இதுபற்றி மீரா சோப்ரா கூறும்போது, ‘கனடா நாட்டு சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகும் தொடரில் நடிக்கிறேன். இதில் ஜோதிடம் பார்க்கும் பெண்ணாக வருகிறேன். இன்னும் சில ஹாலிவுட் வாய்ப்புகள் வருகிறது. அதில் நடிப்பது பற்றி முடிவு செய்யவில்லை’ என்றார்.