சினிமா

விரைவில் மாஸ்டர் டீஸர்? - லோகேஷ் கனகராஜின் அப்டேட்!

jagadeesh

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "மாஸ்டர்" திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாக இருப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாஸ்டர்’.அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா ஊரடங்கால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

இந்நிலையில் படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் படக்குழு இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டால் மட்டுமே டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவற்றை வெளியிட முடியும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் "மாஸ்டர் அப்டேட் லோடிங்" என லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்களுக்கு தீபாவளி கொண்டாட்டமாக மாஸ்டர் டீஸர் வெளியாகும் என்பது உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில்  இது குறித்த தகவல் மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.