சினிமா

’மாஸ்டர்’ தயாரிப்பாளர் - விஷ்ணு வர்தன் கூட்டணியில் ஹீரோவாக அறிமுகமாகும் அதர்வாவின் தம்பி

sharpana

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ’மாஸ்டர்’ படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் படத்தில் நடிகர் அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகிறார். இதற்கான, அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

கடந்த தீபாவளியன்று வெளியான விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் சூப்பர் ஹிட் அடித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படத் தயாரிப்பாளர்களில் சேவியர் பிரிட்டோவும் ஒருவர். இப்படத்தை பிரபல இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்க நடிகர் முரளியின் இளைய மகனும் அதர்வா முரளியின் தம்பியுமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகி நடிக்கிறார்.

இதற்கான, அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. விஷ்ணு வர்தன் இயக்குகிறார் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அத்துடன் விஷ்ணு வர்தன் படங்களில் பெரும்பாலும் யுவன் சங்கர் ராஜாதான் இசையமைப்பார். அதனால் இந்தப் படத்திற்கும் அவரே இசையமைக்க வாய்ப்புள்ளது.

சமீபத்தில்தான் ஆகாஷ் முரளி படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகளை காதல் திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.