ar rahman - mansoor ali khan web
சினிமா

”அந்த பாடல் இடம்பெற்றிருந்தால் 'தக் லைஃப்’ படம் நல்லா ஓடியிருக்கும்..” - மன்சூர் அலி கான்!

ஏஆர் ரஹ்மான் பாடல்களில் ஒரு இறையருள் இருக்கும் என பாராட்டி பேசியுள்ளார் நடிகர் மன்சூர் அலி கான்.

Rishan Vengai

பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.

kamal starring thug life movie review

படம் வெளியாவதற்கு முன்பே ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் இணையத்தில் அதிக அளவில் ட்ரெண்டானது. அதிலும், ஆடியோ லான்ச்சில் சின்மயி பாடிய முத்தமழை பாடல் வீடியோ இன்றளவும் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்னாக இருக்கிறது. பல ரசிகர்கள் தீ வெர்சனா? சின்மயி வெர்சனா? எது சிறந்தது என்ற விவாதத்தை சமூகவலைதளங்களில் நிகழ்த்தும் அளவு முத்தமழை பாடல் இரண்டு வெர்சனிலும் எல்லோரையும் கட்டிப்போட்டது.

ஆனால் ரசிகர்கள் எல்லோராலும் அதிகம் விரும்பப்பட்ட முத்த மழை பாடல் தக் லைஃப் படத்தில் இடம்பெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் படம் நாயகனை போல இருக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்புடன் சென்ற ரசிகர்கள், படமும் நினைத்தது போல இல்லாததால் இரட்டிப்பு விரக்தியை வெளிப்படுத்திவருகின்றனர்.

இந்த சூழலில் பெரிய ஹிட்டடித்த முத்த மழை பாடல் தக் லைஃப் படத்தில் இடம்பெறாததே அப்படம் சரியாக ஓடாததற்கு காரணம் என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

தக் லைஃப் படம் இதனால்தான் நன்றாக ஓடவில்லை..

வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் நடிகர் மன்சூர் அலி கான், ஏஆர் ரஹ்மானின் இசை குறித்து பாராட்டி பேசியதோடு, அவர் இசையமைத்த முத்த மழை பாடல் தக் லைஃப் படத்தில் இடம்பெற்றிருந்தால் படம் நன்றாக ஓடியிருக்கும் என்ற கருத்தை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து வீடியோவில் பேசியிருக்கும் அவர், “ஏஆர் ரஹ்மான் பாடல்களில் எப்போதும் இறையருள் இருக்கும், நான் பக்திமான் கிடையாது. ஆனால் தம்பி ஒரு பக்திமானாக இருப்பதால் அவருடைய பாடல்களில் எப்போதும் இறையருள் இருப்பதை பார்க்க முடிகிறது. எடுத்துக்காட்டாக ‘எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா ஒருவனின்..’ என்ற பாடலை போலவே ‘எல்லா புகழும் ஒருவன் ஒருவன் ஒருவனுக்கே’ என்ற பாடல் உருவாகியிருக்கும்.

மன்சூர் அலிகான்

அதேபோல சமீபத்தில் வந்த தக் லைஃப் படத்தில் கூட இறை பாடலின் ஒரு சந்தம் இடம்பெற்றிருக்கு. அந்த பாடல் இடம்பெற்றிருந்தால் தக் லைஃப் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கும். ‘லா இலாஹா இல்லல்லாஹு லா இலாஹா இல்லல்லாஹுவில் இன்பம் கொள் நெஞ்சமே
தூய கலிமா அதனை தினமும் ஓதுவாய் நெஞ்சமே..’ என்ற பாடலை போன்றே ‘காலை கனவினில் காதல் கொண்டேன் கன்விழித்தேன் அவன் காணவில்லை’ என்ற உணர்வு இடம்பெற்றிருக்கும்.

அது ஏஆர் ரஹ்மானின் இறையருள் டச்சையே காண்பிக்கிறது, அது அவருக்கான மிகப்பெரிய குடுப்பிணை. அவர் இசையமைக்கும் படத்தில் நடிக்க முடியவில்லையே என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்துள்ளது. அவருடைய பெஸ்ட்டை அவர் தொடர்ந்து கொடுக்கனும். ரஹ்மானின் அந்த பாடல் இடம்பெறாததே தக் லைஃப் படம் அதிகம் வரவேற்பு பெறாததற்கு காரணம் என நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.