சினிமா

விமலின் ‘மன்னர் வகையறா’ பொங்கல் வெளியீடு

விமலின் ‘மன்னர் வகையறா’ பொங்கல் வெளியீடு

webteam

விமலின் ‘மன்னர் வகையறா’ பொங்கல் வெளியீடாக வர உள்ளது. அதன் ட்ரெய்லர் நவ-8ல் வெளியாகிறது.
 
விமல் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர உள்ள படம்தான் ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான ஏ3வி சினிமாஸ் தயாரித்துள்ளது.காமெடி மற்றும் கமர்ஷியல் படங்கள் தருவதில் தேர்ந்த இயக்குனர் பூபதி பாண்டியன் இதனை இயக்கியுள்ளார். விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். மேலும் முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ்,யாரடி நீ மோகினி கார்த்திக் என பலர் நடித்திருக்கின்றனர். 

இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.வரும் நவ-8ஆம் தேதி படக்குழு ட்ரெய்லரை வெளியிட இருக்கிறது. அதை தொடர்ந்து 2018 ஜனவரியில் பொங்கல் அன்று படம் திரைக்கு வர இருக்கிறது.