சினிமா

தமிழில் கால்பதிக்கும் மஞ்சு வாரியர்

தமிழில் கால்பதிக்கும் மஞ்சு வாரியர்

webteam

ஈரம் மற்றும் குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகனின் அடுத்த படத்தில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் தமிழில் அறிமுகமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன. 

மலையாள சினிமாவின் கம்பேக் குயினாக அறியப்படும் மஞ்சுவாரியர், தனது கேரியரின் உச்சத்தில் இருந்தபோது நடிகர் திலீபை மணந்துகொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். கடந்த 2015ல் விவாகரத்து பெற்ற பின்னர் அவர் நடித்த ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் மூலம் பிரமாண்டமாக ரீ எண்ட்ரி கொடுத்தார். ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே படத்தின் ஒரிஜினல் பதிப்பே ஹவ் ஓல்ட் ஆர் யூ படம். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட் அடிக்க, சினிமாவில் மீண்டும் பிஸியாக நடித்து வருகிறார். நாகர்கோவிலில் பிறந்திருந்தாலும், இதுவரை நேரடி தமிழ் படங்களில் நடிக்காத மஞ்சு, ஹீரோயினை மையமாக வைத்து இயக்குனர் அறிவழகன் எடுக்கும் படத்தின் மூலம் தமிழ் கூறும் நல்லுலகில் அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திரில்லர் வகையில் உருவாகும் அந்த படத்துக்கான வேலைகள் இம்மாத இறுதியில் தொடங்கும் என்றும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என்றும் கூறப்படுகிறது.