சினிமா

புற்றுநோய் அனுபவம்: புத்தகமாக்கினார் மனிஷா கொய்ராலா

webteam

நடிகை மனிஷா கொய்ராலா, கேன்சரால் பாதிக்கப்பட்ட தனது வாழ்க்கை கதையை ’ஹீல்டு’ என்று புத்தகமாக்கி உள்ளார்.

தமிழில், மணிரத்னம் இயக்கிய ’பம்பாய்’, ஷங்கர் இயக்கத்தில், கமலுடன் `இந்தியன்', ரஜினிகாந்த் ஜோடியாக `பாபா', அர்ஜூனுடன் `முதல்வன்', ’ஒரு மெல்லிய கோடு’, தனுஷின் ’மாப்பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்தவர், இந்தி நடிகை மனிஷா கொய்ராலா. நேபாளத்தைச் சேர்ந்த இவரது தாத்தா பிஷ்வேஷ்வர் பிரசாத் நேபாளத்தின் முன்னாள் பிரதமர். தந்தை பிரகாஷ் கொய்ராலா, முன்னாள் அமைச்சர். சகோதரர் சித்தார்த், நடிகர்.

1989-ம் ஆண்டு, நேபாள சினிமாவில் அறிமுகமான மனிஷா, 1991-ல், `சாடுகர்' என்ற இந்தி படம் மூலம், பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந் து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். 2010-ம் ஆண்டு, தொழிலதிபர் சாம்ராட்டைத் திருமணம் செய்துகொண்ட இவர், 2012-ம் ஆண்டு விவகாரத்து பெற்றார்.  

இந்நிலையில் இவருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று மீண்டு வந் தார். தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் குறித்தும் அதில் இருந்து மீள்வது குறித்தும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் புற்றுநோய் தன்னை தாக்கியது, அமெரிக்க சிகிச்சை பெற்றது, அங்கு பெற்ற அனுபவங்கள், அதில் இருந்து மீண்டு வந்தது, பின் னர் இங்கு புதிய வாழ்க்கையை தொடங்கியது என்பனவற்றை நடிகை நீலம் குமாருடன் இணைந்து ’ஹீல்டு’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். ’கேன்சர் எப்படி எனக்கு புதிய வாழ்க்கையை தந்தது’ என்ற கேப்ஷனுடன் வெளியாகியுள்ள இந்த புத்தகத்தில் தனது அனுபவங்களை அவர் விரி வாக விவரித்துள்ளார்.

‘மனிஷா, கேன்சரில் இருந்து மீண்டு வந்து ஆறு வருடம் முடிந்துவிட்டது. அவர் தனது கதையை, வாழ்வில் சந்தித்த பயம், ஏமாற்றம், நிச்சய மற்றத் தன்மை ஆகியவற்றை அதில் இருந்து மீண்டு புதிய வாழ்க்கையை அவர் எப்படி அமைத்துக்கொண்டார் என்பதை இந்த புத்தகத்தில் விவ ரித்துள்ளார்’ என்று இப்புத்தகத்தை வெளியிட்டுள்ள பெங்குவின் நிறுவனம் தெரிவித்துள்ளது .