சினிமா

கரினா கபூரின் வருமான வரி கணக்கை முடக்கியவர் கைது

கரினா கபூரின் வருமான வரி கணக்கை முடக்கியவர் கைது

Rasus

பிரபல பாலிவுட் நடிகையான கரினா கபூரின் வருமான வரி கணக்கை முடக்கிய மத்திய துணை ராணுவப் படையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரினா கபூரின் ஆடிட்டர் கடந்த வருடம் போலீஸில் புகார் மனுவை ஒன்றை அளித்திருந்தார். அதில் யாரோ மர்ம நபர்கள் கரினா கபூரின் வருமான வரிக் கணக்கை முடக்கி மோசடி செய்துள்ளதாக புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மத்திய துணை ராணுவப் படையை சேர்ந்த ஒருவரை மும்பையை சேர்ந்த சைபர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கரினா கபூரின் தனிப்பட்ட மொபைல் எண்ணை பெற ஆசைப்பட்டு, அவரது வருமான வரிக்கணக்கை குற்றவாளி முடக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.