சினிமா

இவ்வளவு பெரிய வைஃபை பாஸ்வேர்டா? - அதகளத்தில் சமூக வலைதளம்

webteam

பிரபல கலை இயக்குநர் பப்லோ ரோசாட் அவரது இன்ஸாடாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோக்கள்  தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல கலை இயக்குனர் பப்லோ ரோசாட் அவரது இன்ஸாடாகிராம் பக்கத்தில் “எனது பக்கத்து வீட்டுக்காரர்கள் எனது வைஃபை-யை பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறி சில வீடியோக்களை வெளியிட்டார். அவர் வெளியிட்ட முதல் வீடியோவில் அவரது வைஃபையை பயன்படுத்துவதற்கான யூஸர் ஐடி மற்றும் பாஸ்வார்டு அடங்கிய காகிதம் ஒன்று சுவரில் ஒட்டப்பட்டிருந்தது. அதில் யூஸர் ஐடி குட் லக் எனவும், அதற்கான பாஸ்வேர்டு மிக நீளமான வாக்கில் ஆங்கில எழுத்துக்களால் இடம்பெற்றிருந்தது. இராண்டாவது வீடியோவில் அதனை ஒருவர் தனது செல்போனால்  வீடியோ எடுத்துச் சென்றார். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.