சினிமா

திருநங்கையை ஹீரோயின் ஆக்கியது ஏன்? மம்மூட்டி விளக்கம்!

webteam

மம்மூட்டி, அஞ்சலி, சாதனா, சமுத்திரக்கனி, திருநங்கை அஞ்சலி அமீர், சுராஜ் வெஞ்சரமூடு உட்பட பலர் நடித்துள்ள படம், ‘பேரன்பு’. ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்ரீராஜலட்சுமி பிலிம்ஸ் சார்பில் பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு 
செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கார் ஓட்டுனராக மம்மூட்டி நடித்துள்ளார். அவர் ஜோடியாக திருநங்கை அஞ்சலி அமீர் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

தியேட்டரில் ரிலீஸ் ஆவதர்கு முன், திரைப்பட விழாக்களில் இதை திரையிட முடிவு செய்துள்ளனர். அதன்படி, 47-வது சர்வதேச ராட்டர்டேம் (நெதர்லாந்து) திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது. பின்னர் ஷாங்காய் திரைப்பட விழாவிலும் பாராட்டுகளை பெற்றது. இந்தப் படத்தில் நடித்துள்ள திருநங்கை அஞ்சலி அமீரை இயக்குனர் ராமிடம் அறிமுகப்படுத்தியவர் நடிகர் மம்மூட்டி.


 
இதுபற்றி அவர் கூறும்போது, ’ஒரு டிவி நிகழ்ச்சியில், பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட சிலரை பார்த்தேன். அவர்களுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அங்குதான் அஞ்சலி அமீரைப் பார்த்தேன். ‘பேரன்பு’ படத்திலும் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட கேரக்டர் இருந்தது. அதற்கு முன்னணி ஹீரோயின் ஒருவரைதான் இயக்குனர் ராம் யோசித்தார். அப்போது அஞ்சலி அமீரை அவருக்கு அறிமுகப்படுத்தினேன். ராம் ஏற்றுக்கொண்டார். பிறகு அவரையே நடிக்க வைத்தோம். படத்தில் எனது ஹீரோயினாக நடித்திருக் கிறார்’ என்றார் மம்மூட்டி.