சினிமா

மம்மூட்டியின் ’மாமாங்கம்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு!

webteam

மம்மூட்டி நடிக்கும் ’மாமாங்கம்’ என்ற வரலாற்று படத்தில் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது. 

மம்மூட்டி நடிக்கும் வரலாற்று படம், ’மாமாங்கம்’. கேரளாவில் புகழ்பெற்ற மாமாங்கம் திருவிழாவை மையமாக வைத்து உருவாகும் வரலாற்று படம் இது. 17 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையை கொண்ட இந்த படத்தில், பிராச்சி தேஹ்லன், உன்னி முகுந்தன், பிராச்சி தேசாய், மாளவிகா மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். 

முதலில் இந்த படத்தை கதாசிரியர் சஜீவ் பிள்ளை இயக்கினார். அவருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போனது. பின்னர் அவர் மாற்றப்பட்டு எம்.பத்மகுமார் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.

மலையாளம் தவிர தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் இந்தப் படம் தயாராகி வருகிறது. அதிக பட்ஜெட்டில் மலையாளத்தில் உருவாகும் படம் இது என்று கூறப்படுகிறது.