'அம்மா இறைத்தே', 'பஞ்சாக்னி', 'சுந்தரி' போன்ற டிவி சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர் பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர். இவர் சீரியல்கள் தவிர ‘சப்பா குரிஷு’, ‘ நார்த் 24 காதம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
50 வயதான இவர், தனது திறமையான நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் கொண்டுள்ளார்.இந்தநிலையில்தான், சின்னத்திரை தொடர் ஒன்றில் படப்படிப்பிற்காக ,கடந்த 19 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார் திலீப்.
இந்தநிலையில்தான், அவரது படக்குழு அவரை தொடர்பு கொள்ள முயன்றள்ளனர். ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர் தங்கியிருந்த ஹோட்டலில் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, கிட்டதட்ட 2 நாட்கள் அவர் ரூமை விட்டு வெளியே வரவில்லை என்று, ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், அவரது அறையை திறந்து பார்த்தபோது அவர் சடலமாக கிடந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுக்குறித்து போலீஸார் தெரிவிக்கையில்,"அறை உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது. நாங்கள் கதவை உடைத்தபோது, அவர் அசைவற்று கிடந்தார்" என்றனர்.
இந்த மரணம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததாக நம்பப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, மரணத்திற்கான காரணம் உள் இரத்தப்போக்கு, கீழே விழுந்த பின்னர் தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். சில நாட்களாகவே அவருக்கு உடல் நலப்பாதிப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில், அவரது மரணத்தில் சந்தேகப்படும்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை என, காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் மரணம், மர்ம மரணமாக கருதப்படுவதால், அது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஹோட்டர் மற்றும் அதை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், விசாரணை நடந்து வருகிறது.