ஸ்ரீனிவாசன் எக்ஸ் தளம்
சினிமா

மலையாள திரையுலகில் 50 ஆண்டுகள்.. மூத்த நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

மலையாளத் திரையுலகில் பன்முகத் திறமை பெற்றிருந்த எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் காலமானார். அவருடைய மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Prakash J

மலையாளத் திரையுலகில் பன்முகத் திறமை பெற்றிருந்த எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் காலமானார். அவருடைய மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மலையாளத் திரையுலகில் நடிகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகங்களில் கோலோச்சி வந்த ஸ்ரீனிவாசன் (60) காலமானார். நீண்டகாலமாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானதாகக் குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீனிவாசன்

கேரளாவின் தலச்சேரிக்கு அருகிலுள்ள பட்டியத்தில் 1956ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி பிறந்த ஸ்ரீனிவாசன், சென்னை, தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் முறையான பயிற்சியைப் பெற்றார். இது, அவருடைய திரைப்படத் துறைக்கு முக்கியப் பங்கு வகித்தது. சிறு வயதிலிருந்தே, ஸ்ரீனிவாசன் நடிப்பில் மிகுந்த ஆர்வத்தைக் காட்டி வந்த நிலையில், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக 225க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திரங்களால் நாடு முழுவதும் பரவலாகப் பாராட்டப்பட்டார். நடிப்பைத் தவிர, ’ஓடறுத்தம்மாவ ஆளரியம்’ , ’சந்தேசம்’ , ’நாடோடிக் கட்டு’ , மற்றும் ’ஞான் பிரகாசன்’ உள்ளிட்ட படங்களின் மூலம் அவர் ஒரு திரைக்கதை எழுத்தாளராகவும் முத்திரை பதித்தார். இதன்மூலம் அதிகாரத்துவம், வேலையின்மை மற்றும் நடுத்தர வர்க்க வாழ்க்கையின் சிக்கல்கள் போன்ற பிரச்னைகளை அவர் எடுத்துரைத்தார். மேலும் அவர் ’வடக்குநோக்கியந்திரம்’ மற்றும் ’சிந்தவிஷ்டாய சியாமளா’ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். ’கதா பறையும்போல்’, ’தட்டத்தின் மறையத்த ’ஆகிய படங்களையும் இணைந்து தயாரித்தாரித்துள்ளார். மறைந்த ஸ்ரீனிவாசனுக்கு இரண்டு மகன்கள். அவர்கள் இருவரும் இதே திரைப்படத் துறையில் பணியாற்றி வருகின்றனர். ஸ்ரீனிவாசன் மறைவு மலையாளத் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.