நடிகை பாவனா கடத்தலின் பின்னணியில் மலையாள நடிகர் ஒருவர் இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக கோவையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இக்கடத்தலின் மூளையாக செயல்பட்ட பல்சர் சுனில் உள்ளிட்ட சிலரை கேரள போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், நடிகை பாவனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்.
சம்பவத்திற்கு காரணம் தொழிற்போட்டியா அல்லது தனிப்பட்ட பகை காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். பாவனாவுடன் 10க்கும் மேற்பட்ட படங்களில் ஜோடியாக நடித்த பிரபல மலையாள நடிகர் திலீப் கூலிப்படையினரை வைத்து இக்கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.