சினிமா

’மாஸ்டர்’ ஹீரோயின் மாளவிகா மோகனன் நடிக்க விரும்பும் ஹீரோ!

’மாஸ்டர்’ ஹீரோயின் மாளவிகா மோகனன் நடிக்க விரும்பும் ஹீரோ!

sharpana

‘மாளவிகா மோகனன்’…ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் அறிமுகமாகி  மாஸ்டரில் விஜய்க்கு ஜோடியாக நடித்து, ஒரே படத்தின் மூலம் மாஸ் ஹீரோயினாகியுள்ளார்.

கொரோனா சூழலிலும் தமிழ் திரையுலகமே, தற்போது உச்சரித்துக்கொண்டிருப்பது இவரதுப் பெயரைத்தான். தென்னிந்தியாவின் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரவை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகை மாளவிகா மோகனன் என்பதுதான். தற்போது, பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ள மாளவிகா மோகனனுக்கு சம்பளம் 5 கோடி ரூபாய். நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நயன்தாராவின் சம்பளம் நான்கு கோடி ரூபாய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. எதையும் வெளிப்படையாக பேசும் மாளவிகா மோகனன், கொரோனா சூழலில் வீட்டில் இருந்தபடியே ‘தன்னை எப்படி இம்ப்ரெஸ் பண்ணலாம்? தான் வெறுப்பது எவையெல்லாம்.. நடிக்க விரும்பு நடிகர்’ போன்ற பல்வேறு தகவல்களை ஒரு இணையத்திற்கு அளித்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.  

   “சினிமாவில் நான் வெறுப்பது இரண்டு விஷயங்கள்தான். ஒன்று குடும்பத்தினரை பிரிந்து ஷூட்டிங்கிலேயே இருப்பது. சில நேரங்களில் இரண்டு மாதங்கள்கூட பிரியும் சூழல் ஏற்படும். அப்பாவும் அண்ணனும் அவரவர் வேலைகளில் பிஸியாக இருப்பார்கள். அம்மா வீட்டில் தனியாக இருப்பார். நான் அம்மாவை நினைத்து கவலைக்கொள்வேன். இரண்டாவது எனக்கு காண்ட்ரவசி பிடிக்காது.

நான் மிகவும் ரொமாண்ட்டிக்கானவள். அதனால், எனது வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கும். நிறைய ரொமாண்ட்டிக் படங்களில் நடிக்கத்தான் விருப்பப்படுகிறேன். ரொமாண்டிக்கானவள் என்பதாலேயே எனக்கு இரவு பிடிக்கும். நான் ஒரு இரவு பறவை. இரவில் நண்பர்களுடன் சாட் செய்வேன். பாலிவுட்டில் ரொமாண்டிக் படத்தில் நான் நடிக்க விரும்புவபவர் என்றால், அது ரன்பீர் கபூர்தான். தென்னிந்தியாவில் விஜய் சார். அவருடன் நிறைவேறிவிட்டது” என்கிறார்.