சினிமா

ஆப்பிரிக்காவில் சவாரி.. அடுத்து விஜய்யுடன் ஷூட்டிங் - பிஸியான மாளவிகா மோகனன்

ஆப்பிரிக்காவில் சவாரி.. அடுத்து விஜய்யுடன் ஷூட்டிங் - பிஸியான மாளவிகா மோகனன்

webteam

விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் மறுபடியும் மாளவிகா மோகனன் இணைந்துள்ளார்.

ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே அதிகம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதனை அடுத்து அவர், விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். முதற்கட்டமாக சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பில் விஜய் மற்றும் மாளவிகா ஆகிய இருவருக்கான டூயட் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதன்பின் நடைபெற்ற அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் விஜய்க்கான காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட்டன. இவை முடிந்த பிறகு சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி பங்கேற்ற சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டதாக தெரிகிறது.

முதற்கட்ட படப்பிடிப்புக்குப் பின் ஆப்பிரிக்காவிற்கு, விடுமுறை கொண்டாட்டத்திற்காக மாளவிகா சென்றிருந்தார். அங்கு தான்ஸானியாவில் சவாரி செய்தார். புகைப்படக் கலைமீது ஆர்வம் கொண்ட இவர், அங்கே கேமராவும் கையுமாக திரியும் படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தார். அதன்பிறகு தற்போது தனது படப்பிடிப்பிற்காக அவர் திரும்பியுள்ளார். இந்தப் படத்திற்காக தற்காப்பு பயிற்சி கலையைக் கற்று வருகிறார் எனவும் தெரிகிறது.

இந்நிலையில், மாளவிகா விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பில் இணைந்துள்ளதாக தெரிகிறது. அதற்கான படத்தை அவரது தந்தை பகிர்ந்துள்ளார். மேலும் ‘வேலைக்கு போகும்போது அப்பாவையும் அழைத்து போங்கள்’ எனத் தலைப்பிட்டு மகளின் படப்பிடிப்பை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இதனையடுத்துர் வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் படப்பிடிப்பிலும் அவர் பங்கேற்க இருக்கிறார்.

ரஜினி படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான உடனேயே அடுத்த பெரிய ஹீரோவான விஜய் உடன் இவர் சேர்ந்து நடிப்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தில் விஜய்சேதுபதி, மற்றும் சாந்தனு பாக்யராஜ், அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன். எனப் பலர் நடித்து வருகின்றனர். இப்படம் கோடை கொண்டாட்டமாக திரைக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.