சினிமா

மகேஷ்பாபுக்காக அமெரிக்கா சென்ற ’தோழா’ டைரக்டர்!

மகேஷ்பாபுக்காக அமெரிக்கா சென்ற ’தோழா’ டைரக்டர்!

webteam

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, தமிழ், தெலுங்கில் நடித்த ’ஸ்பைடர்’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து அவர் கொரட்டலா சிவா இயக்கும் ’பரத் அனே நேனு’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துவருகிறார். 

இந்தப் படத்துக்குப் பின் அவர் நடிக்கும் படத்தை ’தோழா’வை இயக்கிய வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இது, மகேஷ்பாபுவின் 25 வது படம். இந்தப் படத்தை வெற்றிபெற வைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதிக கவனம் செலுத்துகிறது படக்குழு. படத்தின் வேலைகள் இப்போதே தொடங்கிவிட்டன. இதன் பாடல் கம்போசிங்கிற்காக இயக்குனர் வம்சியும் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தும் அமெரிக்கா சென்றுள்ளனர்.  நியூயார்க்கில் பாடல் கம்போசிங் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. இதை தில் ராஜு, அஸ்வினி தத் இணைந்து தயாரிக்கின்றனர்.