சினிமா

மகேஷ்பாபுவுக்கு பிடித்த விஜய் பஞ்ச் இதுதான்!

webteam

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ்பாபு, ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘ஸ்பைடர்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நேற்று நடந்தது. 

இதில் மகேஷ்பாபு பேசியதாவது: 
18 வருட நடிப்பு அனுபவத்துக்கு பிறகு முதல் படம் பண்ற மாதிரி இருக்கு. முதன் முதலா இரண்டு மொழி படம் பண்ணியிருக்கேன். டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் சாரும் நானும் சேர்ந்து படம் பண்ணலாம்னு 10 வருஷமா பேசிட்டு இருந்தோம். இப்பதான் அதுக்கான நேரம் கிடைச்சது. அவர் என் வீட்டுக்கு வந்து, இரண்டே கால் மணி நேரம் கதை சொன்னார். அவர் என்ன சொன்னாரோ, அதைதான் அப்படியே எடுத்திருக்கார். 125 கோடி ரூபாய்ல படம் எடுக்கணும்னா, அது சாதாரணம் விஷயமில்லை. 
ஆக்‌ஷன் காட்சிகளை பீட்டர் ஹெய்ன் பண்ணியிருக்கார். படத்துக்கு பெரிய லைஃப் கொடுத்திருக்கார் அவர். கிளைமாக்ஸ் காட்சியை 20 நாள் எடுத்தோம். ரொம்ப ரிஸ்க்கான சண்டைக்காட்சி. ’என்ன சார் பண்ணணும்?’னு பீட்டர் மாஸ்டர்ட்ட கேட்டா, ’கயித்துல இழுத்து விடுவாங்க. அங்கயிருந்து இங்க வரணும்’னு சொல்வார். இழுத்துவிட்டா, நான் இங்க விழுவேன். எஸ்.ஜே.சூர்யா சார் அந்த பக்கம் பறப்பார். நடுவுல 100 ஜூனியர் ஆட்டிஸ்ட் விழுவாங்க. ரொம்ப டென்ஷனான வேலை அது. உடனே, பீட்டர் மாஸ்டர் ஓடி வருவார். ’உங்களுக்கு அடிபடலையே’ன்னு கேட்பார். இல்லைன்னதும், ’அப்ப ஒன்மோர் போகலாம்’னு சொல்வார். 

எஸ்.ஜே.சூர்யா சாரை இயக்குனரா தெரியும். ஆனா, இப்ப அவரோட நடிச்சிருக்கேன். கிளைமாக்ஸ் காட்சியில அவர் என்னை கோபமா பார்க்கிற மாதிரி சீன். அவர் என்னை பார்த்தார். எனக்கு சிரிப்பு வந்திருச்சு. ’எப்படி இருந்த ஆளை இப்படி மாத்திட்டாங்களே’ன்னு சொன்னேன். அவர் சிரிச்சார். அவரோட நடிச்சது நல்ல அனுபவம். ஸ்பைடர் கஷ்டமான படம். அதுவும் ரெண்டு மொழியில பண்றது இன்னும் கஷ்டம். அதை ஏ.ஆர்.முருகதாஸ் டீம் சிறப்பா பண்ணியிருக்காங்க.
இவ்வாறு மகேஷ்பாபு கூறினார்.

பின்னர் அவரிடம், ‘உங்களுக்கு பிடித்த விஜய் படத்தின் பஞ்ச் டயலாக் எது?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ’மறக்க முடியாத டயலாக்னா, ’ஐ எம் வெயிட்டிங்’ கற டயலாக்தான்’ என்றார்.