சினிமா

`மோடிக்கு எதிராகப் பேசுங்கள்!' - பெட்ரோல் விலையால் சங்கடத்தை சந்திக்கும் அமிதாப்!

`மோடிக்கு எதிராகப் பேசுங்கள்!' - பெட்ரோல் விலையால் சங்கடத்தை சந்திக்கும் அமிதாப்!

webteam

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார் ஆகியோர் திடீர் எதிர்ப்பை சந்தித்து இருக்கிறார்கள்.

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் விவாதப்பொருளாகி இருக்கிறது. அதுவும் மகாராஷ்டிராவில் கருத்துச் சண்டை மூளும் அளவுக்கு சென்றிருக்கிறது. முந்தைய மன்மோகன் சிங் அரசு பெட்ரோல் விலையை ஏற்றியபோது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், விலை ஏற்றத்தை கண்டித்து ட்வீட் பதிவிட்டார். ஆனால், இன்று பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்த நிலையில், எந்த பிரபலமும் அதைப் பற்றி வாய் திறக்கவில்லை. இதனை முன்வைத்து மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சி, அமிதாப் பச்சன் மற்றும் அக்‌ஷய் குமாருக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

<blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">T 753 -Petrol up Rs 7.5 : Pump attendent - &#39;Kitne ka daloon ?&#39; ! Mumbaikar - &#39;2-4 rupye ka car ke upar spray kar de bhai, jalana hai !!&#39;</p>&mdash; Amitabh Bachchan (@SrBachchan) <a href="https://twitter.com/SrBachchan/status/205471722554654721?ref_src=twsrc%5Etfw">May 24, 2012</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

அமிதாப் பச்சன் மற்றும் அக்‌ஷய் குமார் போன்ற நட்சத்திரங்கள் சம்பந்தப்பட்ட திரைப்படங்களின் படப்பிடிப்பை நிறுத்துவதாக மிரட்டும் அளவிற்கு மகாராஷ்டிரா காங்கிரஸின் மாநில கட்சித் தலைவர் சென்றுள்ளார்.

``எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவது பொது மக்களைத் தாக்கியுள்ளது. மன்மோகன் சிங் அரசாங்கத்தின்போது அமிதாப் பச்சன் மற்றும் அக்‌ஷய் குமார் போன்றவர்கள் எரிபொருள் விலை உயர்வு பற்றி ட்வீட் செய்தார்கள். இன்று அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். சர்வாதிகார மோடி அரசாங்கத்திற்கு எதிராக பேசுவதற்கு அவர்களுக்கு தைரியம் இல்லையா?" என்று மாநில காங்கிரஸ் தலைவர் நானா படேல் கேள்வி எழுப்பினார்.

அதோடு நிற்காமல், ``மகாராஷ்டிராவில் அமிதாப் பச்சன் அல்லது அக்‌ஷய் குமார் சம்பந்தப்பட்ட படங்களின் படப்பிடிப்பை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஒன்று, நீங்கள் நரேந்திர மோடி அரசாங்கத்தின் தேசிய விரோத கொள்கைகளுக்கு எதிராக பேசுகிறீர்கள் அல்லது உங்கள் திரைப்படங்களின் படப்பிடிப்பை நாங்கள் நிறுத்துவோம்" என்று மிரட்டல் விடுத்திருக்கிறார். இது மகாராஷ்டிராவில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில், அமிதாப் பச்சன் மற்றும் அக்‌ஷய் குமாருக்கு ஆதரவாக தற்போது பாஜக களமிறங்கியுள்ளது. ``காங்கிரஸ் மிகவும் திறமையான ஆளுமைகளை அச்சுறுத்துகிறது. இந்தியாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்வது குற்றமா? வெளிநாட்டில் அமர்ந்திருக்கும் சிலர் இந்தியாவின் உருவத்தை களங்கப்படுத்துகிறார்கள், காங்கிரஸ் அவர்களுக்கு ஆதரவளிக்கிறது" என்று மகாராஷ்ட்ரா மாநில பாஜக தலைவர் ராம் கதம் கூறியதோடு, நடிகர்களுக்கு தேவையான பாதுகாப்பை தருவதாக அறிவித்திருக்கிறார்.