LEO
LEO pt desk
சினிமா

லியோ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு

webteam

உலகெங்கிலும் நாளை வெளியாக உள்ள லியோ படத்தை சட்டவிரோதமாக 1,246 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில் வெளியிடுவதை தடுக்க வேண்டுமென அரசு மற்றும் தனியார் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ நிறுவனத்தின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

leo

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, தமிழ்நாட்டில் 850 திரையரங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் 1,500 திரையரங்குகளுக்கு மேல் லியோ படம் வெளியாக உள்ளது.

பிரபல நட்சத்திரங்களான விஜய், அர்ஜூன், த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உள்ளிட்டோரின் நடிப்பில், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், மிகுந்த பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், அதன்மூலம் திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார்.

Madras high court

இதையடுத்து, லியோ திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்த நீதிபதி, அவ்வாறு வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.