வடிவேலு, சிங்கமுத்து எக்ஸ் தளம்
சினிமா

நடிகர் வடிவேலு தொடர்பான வழக்கு.. சிங்கமுத்துவுக்கு அபராதம்! - நீதிமன்றம் உத்தரவு

நடிகர் வடிவேலு தொடர்பான வழக்கில், நடிகர் சிங்கமுத்துவுக்கு ரூ.2.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Prakash J

நடிகர் வடிவேலு தொடர்பான வழக்கில், நடிகர் சிங்கமுத்துவுக்கு ரூ.2.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தன்னைப் பற்றி அவதூறாக யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்ததற்காக ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிடக்கோரியும், தன்னைப் பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகர் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நடிகர் வடிவேலு குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக நடிகர் சிங்கமுத்துக்கு ரூ.2,500 அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வடிவேலுக்கு எதிராக இனிமேல் அவதூறு கருத்தை தெரிவிக்க மாட்டேன் என்று நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் அளிக்கப்பட்டது. அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.