ஜனநாயகன், சென்னை உயர்நீதிமன்றம் web
சினிமா

இடியை இறக்கிய உயர் நீதிமன்றம்.. 'ஜனநாயகன்' கடந்துவந்த பாதை.. 10 முக்கியமான Points!

'ஜனநாயகன்' வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. தீர்ப்பை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, மீண்டும் இடியை இறக்கியுள்ளது உயர் நீதிமன்றம். இந்த நிலையில், 'ஜனநாயகன்' திரைப்பட வழக்கு கடந்து வந்த பாதையை காணலாம்...

Prakash J

ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜயின் கடைசிப் படமாக உருவாகி இருக்கும் ‘ஜனநாயகன்’ படம், கடந்த ஜன.9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக அது, வழக்கை எதிர்கொண்டுள்ளது. தொடர்ந்து, 'ஜனநாயகன்' வெளியாவதிலும் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில், இன்று தீர்ப்பை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, மீண்டும் இடியை இறக்கியுள்ளது உயர் நீதிமன்றம். இந்த நிலையில், 'ஜனநாயகன்' திரைப்பட வழக்கு கடந்து வந்த பாதையை காணலாம்...

டிச.19, 2025

'ஜனநாயகன்' படத்தில் சில மாற்றங்களுடன் யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரை

டிச.24, 2025

பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களைச் செய்து மீண்டும் தணிக்கைக்குச் சமர்ப்பித்த படக்குழு

டிச. 29, 2025

'யு/ஏ' சான்றிதழ் வழங்க தணிக்கைக் குழு சம்மதம் தெரிவித்தது.

ஜனநாயகன்

ஜன.6, 2026

ராணுவம் தொடர்பான காட்சிகள் குறித்து புகார் வந்ததாக கூறி, படத்தை மறுஆய்வுக்கு அனுப்பிய தணிக்கைக் குழு

ஜன.9, 2026

உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உடனடியாகப் படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு

ஜன.9, 2026

தணிக்கை வாரியம் மேல்முறையீடு; தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்றம்

ஜன.12, 2026

சென்னை உயர் நீதிமன்றத் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு

ஜன.15, 2026

உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு; வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்க அறிவுறுத்தல்

சென்னை உயர்நீதிமன்றம்

ஜன. 20, 2026

தணிக்கை வாரியம் மேல்முறையீடு; உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை

ஜன. 27, 2026

தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து: உயர் நீதிமன்றம்

ஜன.27, 2026

தணிக்கை வாரியத்திற்குப் போதிய அவகாசம் வழங்கி மீண்டும் விசாரிக்க தனி நீதிபதி ஆஷாவுக்கு உத்தரவு