பாலா, சிவகார்த்திகேயனுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். காந்தி கண்ணாடி திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு, பல பிரபலங்கள் கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசினார். சிவகார்த்திகேயனின் மதராஸி படமும் அதே நாளில் வெளியாகும் நிலையில், தன் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஷெரிஃப் இயக்கத்தில் பாலாஜி சக்திவேல், 'வீடு' அர்ச்சனா நடித்துள்ள காந்தி கண்ணாடி திரைப்படம், செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையொட்டி சென்னை சாலிகிராமம் அருகே நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் பேசிய பாலா, சிவகார்த்திகேயன் இருக்கும் உயரம் வேறு, தான் இருக்கும் இடம் வேறு என்பதால், தன்னை அவருடன் ஒப்பிடவேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
சிவகார்த்திகேயனின் மதராஸி படமும், காந்தி கண்ணாடி படமும் ஒரே நாளில் வெளியாகும் நிலையில், மதராஸிக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் தன்படத்தை வந்து பார்ப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.