சினிமா

’எங்கெல்லாம் அநீதி தலைதூக்குகிறதோ அங்கு நான் இருப்பேன்’ - மாநாடு சிம்பு நியூ லுக்!

’எங்கெல்லாம் அநீதி தலைதூக்குகிறதோ அங்கு நான் இருப்பேன்’ - மாநாடு சிம்பு நியூ லுக்!

sharpana

வெங்கட் பிரபு இயக்கத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு சிம்பு ’மாநாடு’ படத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் சிம்புவுக்கும் இடையே மோதல் வெடித்ததால், அப்படம் கைவிடப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி மீண்டும் தொடங்கவிருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால், இரு தரப்பும் ஒற்றுமையாக இருந்தாலும் கொரோனா தடையாக இத்தனை மாதம் அமைந்தது. இந்நிலையில், தமிழக அரசு சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கியதால் கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல்  பாண்டிச்சேரியில் மாநாடு ஷூட்டிங் துவங்கியது. இப்படத்தில் ‘அப்துல் காலிக்’ என்ற இஸ்லாமியராக சிம்பு நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறியபின் தனது பெயரை ‘அப்துல் காலிக்’ என்றுதான் மாற்றிக்கொண்டார். இப்படத்திற்கு, அதே அப்துல் காலிக் யுவனேதான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இன்று காலை மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிம்பு தற்போது செகெண்ட் லுக் போஸ்டரை  ‘எப்போது அநீதி எழும்புகிறதோ நான் அங்கு இருப்பேன்’ என்றுக்கூறி வெளியிட்டுள்ளார்.

அதில், ட்ரிம் செய்யப்பட்ட தாடியுடன் கையில் துப்பாக்கியோடு நிற்கும் சிம்புவுவின் பின்னால் ஏகப்பட்ட சிம்புகள் நின்றிருக்கிறார்கள். மாநாடு படப்பிடிப்பில் சிம்பு தாடியுடன் தான் நடிக்கும் படங்களை பகிர்ந்திருந்தார். தற்போது தாடி இல்லாத புகைப்படங்களை வெளியிட்டுள்ளதால், இரட்டை வேடத்தில் நடிக்கிறாரோ என்ற எதிர்பார்ப்புகளும் கிளம்பியுள்ளன.