சினிமா

விஜய்யின் ‘சர்கார்’ படத்தில் ஆளப் போறான் தமிழன்

விஜய்யின் ‘சர்கார்’ படத்தில் ஆளப் போறான் தமிழன்

webteam

‘மெர்சல்’படத்தில் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலை எழுதிய விவேக் விஜய்யின் ‘சர்கார்’ படத்திற்கும் பாடல் எழுத உள்ளதாக அறிவித்துள்ளார். 

‘தளபதி62’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 21ம் தேதி வெளியானது. அத்துடன் முறைப்படி படத்தின் தலைப்பை ‘சர்கார்’ என படக்குழு அறிவித்தது. 

இந்தத் தகவல் வெளியானது முதலே ட்விட்டர் ட்ரெண்டில் இடம்பிடித்தது. வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில், விஜய் கறுப்பு நிற உடையுடன், கூலிங் கிளாஸ் அணிந்திருந்தார். சால்ட் அண்ட் பெப்பரில் தாடி வேறு வைத்திருந்தார். அத்துடன் காதில் ஒரு கறுப்புக் கடுக்கன், கையில் ஒரு லைட்டருடன் வாயில் கறுப்பு சிகரெட்டும் புகைத்துக் கொண்டிருந்தார். அதனை அடுத்து படத்தின் இரண்டாவது லுக், மூன்றாவது லுக் என அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. 

இந்நிலையில்  ‘மெர்சல்’ வெற்றியை தொடர்ந்து ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலாசிரியர் விவேக் ‘சர்கார்’ படத்திற்கு பாடல் எழுத இருப்பதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், “மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைவது மிகப் பெருமையாக உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் உடன் சேர்ந்து வேலை செய்து எனது கனவு. த்ரிலிங்கான வேலை, இரட்டிப்பான மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.