சினிமா

ஜூலை 29-ம் தேதி பாடலாசிரியர் சினேகனுக்கு திருமணம்: நடிகையை மணக்கிறார்

ஜூலை 29-ம் தேதி பாடலாசிரியர் சினேகனுக்கு திருமணம்: நடிகையை மணக்கிறார்

JustinDurai
வரும் ஜூலை 29-ம் தேதி பாடலாசிரியர் சினேகனுக்கு திருமணம் நடைபெறவுள்ளது.
தமிழ்த் திரையுலகில் முன்னணிப் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். 700-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். பாடலாசிரியராக மட்டுமன்றி நடிகர், அரசியல்வாதி எனப் பணிபுரிந்து வருகிறார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இளைஞர் அணி செயலாளராக இருக்கிறார்.
இந்த நிலையில் சினேகன், நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்ய இருக்கிறார். கன்னிகாக ரவி 'தேவராட்டம்' உள்ளிட்ட சில படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்திருக்கிறார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இப்போது பெற்றோர்கள் சம்மத்துடன் திருமணம் செய்ய இருக்கிறார்கள். இவர்கள் திருமணம் வருகிற 29-ம் தேதி கமல்ஹாசன் தலைமையில் எளிமையாக நடக்கிறது.