நடிகர் விஷால்
நடிகர் விஷால் புதிய தலைமுறை
சினிமா

நேரில் ஆஜரான நடிகர் விஷால்.. உயர்நீதிமன்றம் எடுத்த முடிவு! எந்த வழக்கு தெரியுமா?

PT WEB

லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தாமல் இருந்தது, சொத்து விவரங்களை தாக்கல் செய்யாதது குறித்து நேரில் விளக்கமளிக்க விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவர் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' படத்தை வெளியிட தடையும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி P.T.ஆஷா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நடிகர் விஷால் நேரில் ஆஜரானார். இதில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'மார்க் ஆண்டனி' படத்தின் தயாரிப்பில் விஷாலுக்கும் தொடர்பு இல்லை என்பதால் படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

மேலும், விஷாலின் வங்கி கணக்கு விவரம், அசையும், அசையா சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.