சினிமா

ராஜமெளலியின் 'ஆர்ஆர்ஆர்' - தமிழக உரிமையை 50 கோடிக்கு கைப்பற்றியது லைகா நிறுவனம்?

sharpana

ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் தமிழ் உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ராஜெமளலி இயக்கிவரும் 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில்  எடுக்கப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் வியாபாரத்தை தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளது.

அதில், தமிழக உரிமையை சுமார் 50 கோடி ரூபாய் மத்திப்பில் லைகா நிறுவனம் கைபற்றியுள்ளது என கூறப்படுகிறது. தமிழகத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு பெரிய வியாபாரம் கிடையாது. இருந்தாலும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'மாவீரன்', நான் ஈ, பாகுபலி ஆகிய படங்கள் பெரும் வெற்றியடைந்தன. இதனால் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதன் காரணமாகவே பெரிய விலைக்கு வாங்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.