அமெரிக்காவின் நியூயார்க் நகரில் லுங்கியுடன் சுற்றிய ஹீரோவால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தி நடிகர் நவாஸூதின் சித்திக் ஹீரோவாக நடிக்கும் படம், ‘பாபுமோஷாய் பண்டூக்பாஸ்’. இதில் பிதிதா பக், ஸ்ரத்தா தாஸ், திவ்யா தத்தா உட்பட பலர் நடித்துள்ளனர். குஷன் நந்தி இயக்கியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தில் நவாஸூதின் பாபு என்ற கேரக்டரில் நடித்துள்ளார். படத்தில் லுங்கி அணிந்தே வருகிறார். அதனால் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் அப்படியே வருகிறார். சமீபத்தில் இந்தப் படக்குழு அமெரிக்கா சென்றிருந்தது. படத்தின் கேரக்டர் போலவே, ரசிகர்கள் முன்பு லுங்கியில் தோன்ற நவாஸுதின் முடிவு செய்தார். இதையடுத்து நியூயார்க் நகர வீதியில் லுங்கியுடன் நடந்து சென்று ரசிகர்களை சந்தித்தார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அவருடன் ரசிர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
‘இது இயக்குனரின் ஐடியா. அதை நவாஸூதின் செயல்படுத்தினார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது’ என்று படக்குழு கூறியுள்ளது.