சினிமா

பல்வாள்தேவனுடன் காதலா? காஜல் விளக்கம்

பல்வாள்தேவனுடன் காதலா? காஜல் விளக்கம்

webteam

விஜயுடன் மெர்சல் படத்திலும், அஜீத்துடன் விவேகம் படத்திலும் நடித்து வருவதால் உற்சாகத்தில் இருக்கிறார் காஜல் அகர்வால். இந்நிலையில் பாகுபலியில் பல்வாள்தேவனாக நடித்த ராணா டகுபதிக்கு ஜோடியாக நடித்த நேனே ராஜு நேனே மந்திரி படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இதனிடையே ராணாவுக்கும் காஜல் அகர்வாலுக்கும் காதல் என செய்திகள் வெளியாகின. இதுகுறித்து விளக்கமளித்துள்ள காஜல், ‘நாங்கள் இருவரும் நீண்ட நாட்களாக நல்ல நண்பர்களாக மட்டுமே பழகி வருகிறோம். காதல் என்று கூறுவது வதந்தி’ என்கிறார். 
பாகுபலிக்கு அடுத்த படம் என்கிற எதிர்பார்ப்பில்தான் நேனே ராஜு நேனே மந்திரி’ படம் ஹிட்டானதாக கூறப்படுகிறதே எனக் கேட்டால், ‘இல்லை. ராணா எப்போதுமே மிகச்சிறந்த நடிகர். கடின உழைப்பாளி. பாகுபலி படம் அவருக்கு அங்கீகாரம் மட்டுமே’’ என்கிறார். 
ஏற்கெனவே த்ரிஷாவை ராணா காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டது.