சினிமா

அனுஷ்காவுடன் காதலா? பிரபாஸ் விளக்கம்!

அனுஷ்காவுடன் காதலா? பிரபாஸ் விளக்கம்!

webteam

பாகுபலியில் இணைந்து நடித்த பிரபாஸுடன் அனுஷ்காவுக்கு காதல் எனவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன. 
பாகுபலி படத்திற்கு முன் இருவரும் இணைந்து நடித்து வந்தாலும் அப்படத்திற்கு பிறகுதான் இருவரும் காதலித்து வருவதாக பலமாக பேச்சு அடிபட்டு வருகிறது. பாகுபலி 2ம் பாகத்திற்குப் பிறகு பிரபாஸுக்கு இந்திய அளவில் பெண் ரசிகைகள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபாஸ் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரபாஸ், ’எனது பெண் ரசிகைகள் கவலையடைய தேவையில்லை.  தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லை. அதைபற்றி யோசிக்கவும் இல்லை. பலரும் என் மீது அக்கறையாக இருப்பது எனது அதிர்ஷடம் என உணர்கிறேன்’ என்றவரிடம் அனுஷ்காவுடன் காதல் எனப்பேசப்படுகிறதே எனக்கேட்டால், ‘இது இட்டுக்கட்டப்படும் கதை. இப்படி கிசுகிசுக்கள் கிளம்பும் என்பது எனக்கும் தெரியும். ஒரு நடிகரும், நடிகையும் ஓரிரு படங்கள் இணைந்து நடித்தாலே அவர்களுக்குள் காதல் என வதந்தி வருவது வாடிக்கையாகி விட்டது. இது மோசமான செயல். எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில் எப்படி இப்படி எல்லாம் எழுதுகிறார்கள் என்பது புரியவில்லை. இந்த வதந்தியை  கிரகித்துக் கொள்ளும் பக்குவம் எனக்கு இப்போது வந்துவிட்டது’’ என்கிறார்.