திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படங்களை எந்தக் காரணமுமின்றி எடுத்து விட்டு, புதுப் படங்களைத் திரையிடுவது மிகவும் அநாகரிகமான செயல் என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்று வரும் குரங்கு பொம்மை திரைப்படத்தின் நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய பாரதிராஜா திரையரங்குகளில் ஓடும் படங்களை ஓட விட வேண்டும் என்று கூறினார். அவ்வாறு செய்யாமல் புதுப் படங்கள் வந்து விட்டது என்று நன்றாக ஓடும் படங்களை திரையரங்குகளிலிருந்து எடுத்து விடுவது அநாகரிகமான செயல் என்றும் அவர் ஆதாங்கம் தெரிவித்தார். சமீபத்தில் பாரதிராஜா நடித்து வெளியாகியுள்ள குரங்கு பொம்மை படம் நன்றாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.