வெற்றிமாறன்  PTI
சினிமா

அரசன் புரோமா! ’வன்முறையை வளர்க்காதீர்கள் வெற்றிமாறன்’ - இயக்குநர் லெனின் பாரதி!

தீபாவளியையொட்டி வெளியாகியிருக்கும் அரசன் பட புரோமா குறித்து இயக்குநர் பாரதி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Premkumar S

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அசுரன்’. இப்படத்தின் அறிவிப்பு புரோமோ வெளியானதில் இருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. மேலும், இது வடசென்னை உலகத்தில் நிகழும் கதை என்பதும், ரசிகர்களுக்கு கூடுதல் சர்ப்ரைஸாக இருந்தது. இந்தச்சூழலில் தான், தீபாவளியையொட்டி மற்றுமொரு புரோமோ வெளியாகும் கூறப்பட்டது. ஆனால், இந்தப்படத்துக்கு, அனிருத் இசையமைக்கும் நிலையில், அவர் திருமணத்தையொட்டி புரோமோ பணிகள் நிறைவடையாததால், அதன் வெளியீடு டிசம்பருக்கு தள்ளிப்போகும் என தகவல் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

எனினும், நேற்றைய தினம் அரசன் படம் குறித்தான சுமார் 1.40 நிமிட வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது. ஆனால், ’அந்த வீடியோவில் பயன்படுத்தப்பட்டுள்ள பாடல் சரியில்லை’ என பெரும்பாலான ரசிகர்கலின் எதிர்மறை விமர்சனங்களையே அந்த புரோமா சந்தித்து வருகிறது.

இதற்கிடையில் தான், அந்த பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள வரிகள் வன்முறையைத் தூண்டும் விதமாக இருப்பதாக இயக்குநர் லெனின் பாரதி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”இளைஞர்களை வன்முறை & போதை கலாச்சாரம் சீரழிக்கும் சூழலில்.. “நூறு பேர மட்ட அடிச்சு சுத்துவேன் சீனா..” “நூறுபேரு சுத்துப்போட்டாலும் தாஸ் அண்ணன் கொக்கி சாமான் தாண்டா பஸ்ட்டு” என வன்முறை வெறியை இளம் மனங்களில் பயிர்செய்து வளர்க்காதீர்கள் வெற்றிமாறன் அவர்களே..?” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.