லீக் ஆன ‘மாநாடு’ பாடல் பற்றி யுவன் சங்கர் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். முதன்முறையாக இவர் சிம்பு படத்தை இயக்க உள்ளார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படம் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் ஆகிவிட்டன.
இந்நிலையில், திடீரென்று இந்தப் படத்தில் ‘டைட்டில் சாங்’ என்ற பெயரில் நேற்று சமூக வலைத்தளங்களில் ஒரு பாடல் வெளியானது. ‘உனக்கு நா வேனா டி’ என்ற அந்தப் பாடலை சிம்பு பாடி இருந்தார். அச்சு அசல் சிம்பு குரல் சாயலில் இப்பாடல் இருந்ததால் அது ‘மாநாடு’ படத்தின் பாடல்தான் என தகவல் கசிந்தது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கவே இல்லை. இன்னும் இதற்கு யுவன் இசையமைக்கவே ஆரம்பிக்கவில்லை. அதை பற்றி ஒரு செய்தியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது படத்தின் பாடல் எப்படி வெளியாகும் என சினிமா வட்டாரத்தினர் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையிதான் இந்தப் பாடல் குறித்து யுவன் தன் விளக்கத்தை வெளியிட்டுள்ளார். “இந்தப் பாடல் ட்யூன் என்னுடையதல்ல; அந்தச் செய்தி உண்மையில்லை” என்று கூறியுள்ளார். அவர் என்ன தான் விளக்கம் கொடுத்தாலும் அப்பாடல் யுடியூப்பில் வேகமாக பரவி வருகிறது.