சினிமா

இசைக்கு மொழியில்லை... ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் ஆதரவு

இசைக்கு மொழியில்லை... ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் ஆதரவு

webteam

இசையை ரசிப்பதில் ரசிகர்களுக்கு சகிப்புத்தன்மை வேண்டும் என பிரபல பாடகி லதா மங்கேஸ்கர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் நிகழ்ச்சியில் தமிழ் பாடல்கள் அதிகம் பாடப்பட்டதால் வட இந்திய ரசிகர்கள் சிலர் வெளிநடப்பு செய்தததாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் ரஹ்மானுக்கு ஆதரவாக பாடகர்களும், நடிகர்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஸ்கரும் ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். 

‘ரசிகர்களுக்கு சகிப்புத் தன்மை வேண்டும். எனது 70 வருட அனுபவத்தில் பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடி இருக்கிறேன். பாடியும் வருகிறேன். மேடைக்கச்சேரிகளிலும் பங்கேற்று வருகிறேன். ரசிகர்கள் இசையை கேட்கவே விரும்புகிறார்கள். ரஹ்மான் இந்திப் பாட்டு பாடவில்லை என்பதை ரசிகர்கள் சர்ச்சையாக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். லதா மங்கேஸ்கர் ரஹ்மான் இசையில் ஐந்து பாடல்களைப் பாடியுள்ளார். 38 மொழிகளில் அவர் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.