நடிகை சித்திரா முகநூல்
சினிமா

மறைந்த சின்னத்திரை நடிகை சித்திராவின் தந்தை எடுத்த விபரீத முடிவு!

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

சின்னத்திரையில் தனது திறமையான நடிப்பின் மூலம் மக்களின் மனங்களை வென்றவர்தான் நடிகை சித்ரா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, சித்ராவின் மரணத்தில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு தொடர்பு உள்ளது என்று பரபரப்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

இதற்காக வழக்குப்பதிவும் செய்யப்பட்டு, இந்த வழக்கு திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்தநிலையில், சித்ராவின் மரணத்தில் ஹேம்நாத்திற்கு தொடர்பு இருப்பதாக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, நீதிமன்றம் ஹேம்நாத்தை விடுதலை செய்தது.

இந்தநிலையில்தான், தற்போது மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.)