நேற்று நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள். அதையொட்டி அவருக்கு தமிழக அரசு சார்பில் மணி மண்டபம் திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவில் துணை முதல்வர் ஒபிஎஸ், கமல், ரஜனி, பிரபு என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அவரது குடும்ப நண்பரான லதா மகேஷ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று அவருக்கு நினைவு அஞ்சலி தெரிவித்துள்ளார். அதில் அவர், நேற்று சிவாஜி அண்ணாவுக்கு பிறந்தநாள். நேற்று முழுவதும் அவரது நினைவாகவே இருந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.