சினிமா

”மற்றவர்களை கவனிக்க நானும் நலமாக இருக்கணும்” கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட குஷ்பு!

”மற்றவர்களை கவனிக்க நானும் நலமாக இருக்கணும்” கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட குஷ்பு!

sharpana

நடிகை குஷ்பு இன்று அப்போலோ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.

நாடு முழுவதும் 60 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் அரசியல்வாதிகளூம் கிரிக்கெட் பிரபலங்களூம் சினிமா துறையினரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு வருகிறார்கள். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி ஊசி போட்டுக்கொண்டார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முதல்வர் நிதிஷ் குமார்,

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரும் முதல் நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரபலங்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். அதேபோல, கிரிக்கெட் வீரர் கபில் தேவும் இன்று கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.

தமிழகத்தில், நடிகர் கமல்ஹாசன், ராதிகா, பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். இந்நிலையில், நடிகை குஷ்பு இன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக குஷ்பு தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “என் குடும்பத்தை கவனித்துக்கொள்கிறேன், அதோடு தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களை சந்திக்கிறேன். மற்றவர்களை கவனித்துக்கொள்வதற்கு நான் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டேன்” என்று குஷ்பு ட்விட்டர் பதிவிட்டுள்ளார்