சினிமா

கும்கி-2: டி.இமானை தவிர்த்த பிரபுசாலமன்!

கும்கி-2: டி.இமானை தவிர்த்த பிரபுசாலமன்!

webteam

கும்கி-2 படத்தில் தனது ஆஸ்தான இசையமைப்பாளர் டி.இமானை பிரிய இருக்கிறார் பிரபு சாலமன்.

தொடரி படத்தை அடுத்து கும்கி-2 படத்தை இயக்க இருக்கிறார் பிரபு சாலமன். இந்தப் படத்தில் கும்கி படத்தில் நடித்த யாருக்கும் அவர் வாய்ப்புத் தரவில்லை. முற்றிலும் புதுமுகங்களை கொண்டு படத்தை இயக்க அவர் தயாராகி விட்டார். இருப்பினும், இந்தப்படத்திற்கு அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் டி.இமான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் கும்கிக்கு முன்பும், அதனைத் தொடர்ந்தும் இவர் இயக்கிய படங்களுக்கு இசையமைத்து வந்த இமானை பிரிந்திருக்கிறார் பிரபு சாலமன்.  காரணம் பட்ஜெட். தொடரி படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதால், குறைவான பட்ஜெட்டில் படம் இயக்குவதால்தான் கும்கி படத்தில் இடம் பெற்ற நடிகர்களையும், கலைஞர்களையும் தவிர்த்துள்ளார். அதே பட்ஜெட் காரணமாகத்தான் இமானையும் பிரபு சாலமன் தவித்துள்ளார். இந்தப்படத்திற்கு தெகிடி, சேதுபதி, கூட்டத்தில் ஒருவன் ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்த நிவாஸ் கே.பிரசன்னா இசைமயக்க இருக்கிறார்.