சினிமா

குமாரசாமி, எடியூரப்பா சினிமாவிலும் டிஷ்யூம்!

குமாரசாமி, எடியூரப்பா சினிமாவிலும் டிஷ்யூம்!

Rasus

அரசியலில் மோதிக்கொள்ளும் குமாரசாமியும் எடியூரப்பாவும் சினிமாவிலும் மோதிக்கொள்ள இருக்கின்றனர்.

கர்நாடக முன்னாள் முதலமைச்சரான ஹெச்.டி.குமாரசாமியின் வாழ்க்கை வரலாறு பூமிபுத்ரா என்ற பெயரில் சினிமாவாக உருவாகிறது. இதில் குமாரசாமியாக அர்ஜூன் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் மற்றொரு முன்னாள் முதலமைச்சரான பாஜகவின் எடியூரப்பாவின் வாழ்க்கையும் சினிமாவாகப் போகிறது. இதை பாரதிய ஜனதா கட்சியினர் சிலர் சேர்ந்து தயாரிக்கின்றனர்.

’எடியூரப்பாதான் நிஜமான பூமிபுத்ரா. அவர்தான் விவசாயிகளுக்காக கடந்த 40 வருடங்களாகப் போராடி வருகிறார். விவசாயிகளுக்காக அவர் செய்த நல்ல விஷயங்களை வைத்து இந்தப் படம் உருவாகிறது. படத்துக்கு பூமிபுத்ரா ஜனகா பிஎஸ்ஒய் அல்லது நெகிலயோகி என்று டைட்டில் வைக்க இருக்கிறோம்’ என்றார் எடியூரப்பா ஆதரவாளரும் பாஜகவை சேர்ந்தவருமான தேஜஸ்வினி ரமேஷ்.

சபாஷ் சரியான போட்டி என்கிறது கர்நாடக திரையுலகம்.