சினிமா

”வீரப்பன், பின்லேடன் பயோபிக்கிற்கு மட்டும் அனுமதியா?” கோமாளி’ பட இயக்குநர் ஆதங்கம்!

sharpana

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வராலாற்றுப் படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டு பின்பு முத்தையா முரளிதரனின் அறிவுறுத்தலின் பேரில், விலகிக்கொண்டார் விஜய் சேதுபதி. வி.சி.க தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கவிஞர் தாமரை, தோழர் தியாகு உள்ளிட்ட பலரும் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்காமல் விலகிக்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

முத்தையா முரளிதரனின் அறிக்கையை வெளியிட்டு ‘நன்றி வணக்கம்’ என்று அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் விஜய் சேதுபதி. இப்படத்தில் நடிப்பது குறித்து எதிர்ப்பும் ஆதரவும் நிலவி வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ’கோமாளி’ படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக ட்விட் செய்துள்ளார்.

ஜெயம் ரவிக்கு 24 வது படமான கோமாளி மூலம்தான் இயக்குநராக அறிமுகமானார், பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் ட்ரைலர் வெளியானபோதே ரஜினியை கிண்டல் அடிப்பதாகக் கூறி சர்ச்சையானதால் ரஜினி குறித்த காமெடி விமர்சனம் நீக்கவும் பட்டது.  

பிரதீப் ரங்கநாதன்

90ஸ் கிட்ஸ்களின் காதலை ரசனையோடு சொல்லி கோமாளியை கொண்டாட வைத்த பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பதிவில், ”பயோபிக் என்பது எவரைப் பற்றியும் எடுக்கலாம். மதர் தெரசாவோ, ஹிட்லரோ, அந்த நபர் தவறானவர் என்று நினைத்தால், தவறான ஒரு நபரைப் பற்றிய படமாக இருக்கட்டுமே. அவர் நல்லவர் என்றால், நல்லவர் ஒருவரைப் பற்றிய படமாக இருக்கட்டுமே? ஏன் அதைத் தடுக்க வேண்டும்? வீரப்பன், பின்லேடன் ஆகியோரைப் பற்றிய பயோபிக்குக்கு மட்டும் அனுமதி உண்டோ?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்