சினிமா

‘பேப்பர் ராக்கெட்’ : முதன்முறையாக வெப் சீரிஸ் இயக்கும் கிருத்திகா உதயநிதி

sharpana

ஓடிடி தளத்திற்காக முதன்முறையாக வெப் சீரிஸ் இயக்குகிறார் கிருத்திகா உதயநிதி.

’வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் கிருத்திகா உதயநிதி கடைசியாக, கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் ‘காளி’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில், நான்கு வருட இடைவேளைக்குப்பிறகு மீண்டும் இயக்கம் திரும்பியிருக்கிறார். ஆனால், திரைப்படம் இயக்கவில்லை. ஜீ5 ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸ் இயக்குகிறார். ‘பேப்பர் ராக்கெட்’ என்று பெயரிட்டுள்ள இந்த வெப் சீரிஸில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ’மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ படங்களுக்கு வசனம் எழுதிய அசோக்.ஆர் வசனங்கள் எழுத ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் இத்தொடரை தயாரிக்கிறார்.

நிர்மல் பாலாழி, கௌரி கிஷன், தீரஜ், நாகிநீடு, சின்னி ஜெயந்த், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ், குமார், அபிஷேக், பிரியதர்ஷினி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். இத்தொடரின் தலைப்பையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டதோடு ‘காலை மாலை’ என்று தொடங்கும் ஃபர்ஸ்ட் சிங்கிளையும் வெளியிட்டுள்ளது படக்குழு. சித் ஸ்ரீராம் இப்பாடலை பாடியுள்ளார். தரன் குமார், சைமன் கிங் மற்றும் வேத்சங்கர் என மூன்று இசையமைப்பளர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.