ஓடிடி திரைப்பார்வை முகநூல்
சினிமா

The Last Of Us முதல் Odela 2 வரை ; இந்த வார OTT, தியேட்டர் லிஸ்ட்!

இந்த வாரம் வெளியாகவிருக்கும் படங்களின் விவரங்கள் இதோ!

Johnson

Series

The Last Of Us (English) Jio Hotstar - Apr 14

2023ல் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்ற சீரிஸ் `The Last Of Us'. அதன் தொடர்ச்சியா இரண்டாம் சீசன் வாரம் ஒரு எப்பிசோடாக வெளியாகிறது. புஞ்சைகள் மனித மூளையை கட்டுப்படுத்தும் post-apocalyptic சூழலில்,
இம்முறை ஜோ மில்லர் - எல்லி என்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதே கதை.

The Stolen Girl (English) Jio Hotstar - Apr 16

Eva Husson இயக்கியுள்ள சீரிஸ் `The Stolen Girl'. தன் மகளை, புதிய தோழி வீட்டுக்கு அனுப்பிய பின், அந்த தாய்க்கு வரும் சிக்கல்களே கதை.

Khauf (Hindi) Prime - Apr 18

ஸ்மிதா சிங் உருவாக்கியுள்ள சீரிஸ் `Khauf'. டெல்லியில் ஒரு இளம் பெண் வசிக்கும் அறையில், கடந்த காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம், நிகழ் காலத்தை எப்படி பாதிக்கிறது என்பதே கதை.

OTT

Logout (Hindi) Zee5 - Aug 18

மறைந்த நடிகர் இர்ஃபான் கானின் மகன் பபில் கான் நடித்துள்ள படம் `Logout'. பிரத்யுஷ் என்ற சோஷியல் மீடியா பிரபலத்தின் போன் அவரது ரசிக்கரால் திருடப்படுகிறது. அதன் பின் நடப்பவையே கதை. 

Post Theatrical Digital Streaming

Kingston (Tamil) Zee5 - Apr 13

கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், திவ்ய பாரதி நடித்த படம் `கிங்ஸ்டன்’. கடலுக்குள் இருக்கும் ஆபத்தையும் மீறி ஹீரோ செய்யும் சாகசமே கதை.

Kaadhal Enbadhu Podhu Udamai (Tamil) Sun NXT - Apr 14

ஜெயப்பிரகாஷ் இயக்கத்தில் லிஜோ மோல் நடித்த படம் `காதல் என்பது பொதுவுடைமை’. எல்லா காதலும் சமமானதே என்பதை சொல்லும் கதை. 

Yemagathagi (Tamil) Aha - Apr 14

பிபின் ஜார்ஜ் இயக்கிய படம் `எமகாதகி’. இறந்து போன பெண்ணின் சடலத்தை வீட்டில் இருந்து வெளியே எடுக்க முடியாதபடி பல தடைகள் ஏற்படுகிறது. அது ஏன் என்பதே கதை.

Vishnu Priya (Kannada) Prime - Apr 18

வி கே பிரகாஷ் இயக்கிய படம் `Vishnu Priya'. தன குடும்பத்தை இணைக்க போராடும் விஷ்ணு என்ற இளைஞசனை பற்றிய கதை.

Mere Husband Ki Biwi (Hindi) Hotstar - Apr 18

முடாசர் அஸிஸ் இயக்கத்தில் அர்ஜூன் கபூர், புமி, ரகுல் ப்ரீத் சிங் நடித்த படம் `Mere Husband Ki Biwi'. முன்னாள் காதலி ஒருவருடைய வாழ்க்கையில் திரும்ப வருகிறார், அதன் பின் என்னாகிறது என்பதே கதை.

Theatre

Odela 2 (Telugu) - Apr 17

அசோக் தேஜா இயக்கத்தில் தமன்னா நடித்துள்ள படம் `Odela 2'. ஓடேலா மல்லன்னா சுவாமி பாதுகாப்பில் இருக்கும் ஒரு கிராமத்தைப் பற்றிய கதை.

Ten Hours (Tamil) - Apr 18

இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் சிபிராஜ் நடித்துள்ள படம் `Ten Hours'. இரவில் சென்னை - கோயம்புத்தூர் செல்லும் ஒரு பேருந்தில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலையை செய்தது யார் என்ற விசாரணையே கதை.

Naangal (Tamil) - Apr 18

அவினாஷ் பிரகாஷ் இயக்கியுள்ள படம் `நாங்கள்'. ஒரு உடைந்து போன குடும்பமும், அதன் உறுப்பினர்களும் கதை.

Arjun Son Of Vyjayanthi (Telugu) - Apr 18

பிரதீப் இயக்கத்தில் கல்யாண்ராம், விஜய சாந்தி நடித்துள்ள படம் `Arjun Son Of Vyjayanthi'. போலீஸ் அம்மாவுக்கும், அவரது மகனுக்கும் இடையில் நடக்கும் மோதலே கதை.

Kesari Chapter 2: The Untold Story of Jallianwala Bagh (Hindi) - Apr 18

கரண் சிங் தியாகி இயக்கத்தில் அக்ஷய் குமார், மாதவன் நடித்துள்ள படம் `Kesari Chapter 2: The Untold Story of Jallianwala Bagh'. ஜாலியன் வாலாபாக் பற்றிய உண்மைகளை கொண்டு வர போராடும் ஒரு வக்கீலின் கதை.

Sinners (English) - Apr 18

Ryan Coogler இயக்கத்தில் Michael B. Jordan நடித்துள்ள படம் `Sinners'. தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும் இரட்டை சகோதரட்களுக்கு காத்திருக்கிறது ஆபத்து. அதை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதே கதை.

Paddington in Peru (English) - Apr 18

Dougal Wilson இயக்கியுள்ள படம் `Paddington in Peru'. பெருவில் இருக்கும் தன் அத்தை வீட்டுக்கு வரும் பேட்டிங்டன் சந்திக்கும் விஷயங்களே கதை