7 ஆண்டுகளுக்குப்பிறகு குஷ்பு மீண்டும் நடித்துள்ள "ஓ அந்த நாட்கள்" படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் தொடங்கி இருக்கிறது.
ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் குஷ்பு, ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம் மற்றும் ஊர்வசி நடித்துள்ள இந்தப் படத்திற்கு 'ஓ! அந்த நாட்கள்' என தலைப்பிட்டுள்ளனர். 1980 - 90களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த குஷ்பு, ராதிகா, சுஹாசினி மற்றும் ஊர்வசி ஆகிய நால்வரும். நடிகைகள் என்பதைத் தாண்டி நெருங்கிய நண்பர்களாகவும் வலம் வந்தவர்கள். அவர்கள் இணைந்து நடித்துள்ள இந்தபடம் முழுக்க ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டுள்ளது.
ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் ஆஸ்திரேலியாவிலேயே முடித்து திரும்பியிருக்கிறது படக்குழு. முழுக்க நட்பை பின்புலமாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.
இதுகுறித்து குஷ்பு கூறுகையில், 'தற்போது நான் நடித்துள்ள "ஓ அந்த நாட்கள்" படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. டப்பிங் பணிகள் மட்டுமே முடியவேண்டி இருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் இது எனக்கு முதல் படம். எனது தோழிகளுடன் இணைந்து ஒரே படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.