சினிமா

''மிக மிக விரைவில்'' - கேஜிஎஃப் இயக்குநர் போட்ட ட்வீட்டால் தெறிக்கும் சமூக வலைதளங்கள்!

webteam

கர்நாடக நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி வெளியான திரைப்படம் கேஜிஎஃப். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்தப் படம் கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் கதாநாயகன் யாஷுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றன.

அக்டோபர் மாதம் 23ம் தேதி படம் வெளியாகும் என ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவால் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் அப்டேட் குறித்து பிரஷாந்த் நீல் ட்வீட் செய்துள்ளார். மிக மிக விரைவில் #KGFChapter2 அப்டேட் எனத் தெரிவித்துள்ளார். இதனையத்து #KGFChapter2 ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. என்ன அப்டேட்டாக இருக்குமென ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்