சினிமா

'கே.ஜி.எஃப். 2' டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

'கே.ஜி.எஃப். 2' டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

JustinDurai

'கே.ஜி.எஃப் 2' படத்தின் ட்ரைலர் வரும் மார்ச் 27ம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாக உள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப்'. இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘கே.ஜி.எஃப்.: சாப்டர் 2’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. இந்தப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீணா தாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகளும் முடிந்துள்ளது.

இந்த நிலையில் 'கே.ஜி.எஃப். 2'  படத்தின் டிரைலர் வரும் மார்ச் 27ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி திரையில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: கடுக்கன், தாடி... வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்