சினிமா

கேஜிஎஃப் 2 ரிலீஸ் தேதி எப்போது? - இன்று மாலை அறிவிப்பு

கேஜிஎஃப் 2 ரிலீஸ் தேதி எப்போது? - இன்று மாலை அறிவிப்பு

jagadeesh

கன்னட நடிகர் யாஷ் நடித்துள்ள ’கேஜிஎஃப் 2’ ரிலீஸ் தேதி இன்று மாலை 6.32 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கன்னடத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ பிரமாண்டமான வசூல் சாதனை செய்தது.

அதனைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி, அதிலும் வெற்றியை குவித்தது. இந்த வெற்றியால் ’கேஜிஎஃப் 2’ படத்தின் ஷூட்டிங்கை உற்சாகமுடன் அறிவித்து தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பிலும் ஈடுபட்டு வருகிறது படக்குழு.

இரண்டாம் பாகத்தில் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ்,ரவீனா தண்டன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். கேஜிஎஃப் 2 டீசர் யாஷ் பிறந்தநாளான ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல மொழிகளில் முன்னணி விநியோகஸ்தர்கள் நடிகர்கள் வெளியிட இருக்கிறார்கள். மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருக்கிறார்.

இந்நிலையில் "நாங்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவோம்" என தெரிவித்து கேஜிஎஃப் படக்குழு முக்கியமான அறிவிப்பை இன்று மாலை 6.32 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கேஜிஎஃப் 2 ரிலீஸ் தேதி இன்று மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.