சினிமா

தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷுக்கு ரஜினி படக்குழு வைத்த ‘சர்ப்ரைஸ்’ பார்ட்டி

தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷுக்கு ரஜினி படக்குழு வைத்த ‘சர்ப்ரைஸ்’ பார்ட்டி

webteam

கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்ற மகிழ்ச்சியை ‘தலைவர் 168’ படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளது.

ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார். இந்தப் படத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை மீனா, குஷ்பு ஆகிய இரு நடிகைகளும் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கின்றனர். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ், முதன்முறையாக ரஜினியுடன் சேர்ந்து நடிக்கிறார். குஷ்பு, இதில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த தேசிய விருது வழங்கும் விழாவில் ‘சிறந்த நடிகை’க்கான விருதை ‘மகாநடி’ படத்திற்காக கீர்த்தி சுரேஷ் பெற்றார். அதனை அடுத்து ‘தலைவர்168’ படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் தேசிய விருது பெற்றதை கொண்டாடும் வகையில் படக்குழு கேக் வெட்டி அவருக்கு சிறப்பு செய்தது. அதில் நடிகர் ரஜினிகாந்த், படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா, பரோட்டா சூரி உட்பட பலர் கலந்து கொண்டனர். அதற்கான படத்தை கீர்த்தி சுரேஷ், அவரது இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில், ‘இனிபான இந்தச் செய்கையால் பறக்கிறேன். ஆகவே ரஜினிகாந்த்திற்கு மிக்க நன்றி’ எனக் கூறியுள்ளார்.

‘தலைவர்168’ படம் கிராம பின்னணியை வைத்து உருவாகி வரும் குடும்ப திரைப்படம் எனத் தெரிகிறது. இந்தப் படத்திற்கான பூஜை ரஜினி பிறந்தநாளையொட்டி நடைபெற்றது. ராமோஜி ராவ் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற முதன் நாள் படப்பிடிப்பில், பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாக தெரிகிறது. இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று திரைக்கு வரும் என கூறப்படுகிறது. ஆனால் அதை தயாரிப்பு நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை.