சினிமா

விஜய் பிறந்தநாள்: ‘ஆல்தோட்ட பூபதி’ பாடலுக்கு உற்சாகமுடன் நடனமாடி கீர்த்தி சுரேஷ் வாழ்த்து

விஜய் பிறந்தநாள்: ‘ஆல்தோட்ட பூபதி’ பாடலுக்கு உற்சாகமுடன் நடனமாடி கீர்த்தி சுரேஷ் வாழ்த்து

sharpana

நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி நடிகை கீர்த்தி சுரேஷ் ‘ஆல்தோட்ட பூபதி’  பாடலுக்கு செம்ம உற்சாகத்துடன் நடனமாடிய வீடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

நடிகர் விஜய்யின் மிகப்பெரிய ரசிகர் கீர்த்தி சுரேஷ். அவர், அளிக்கும் பேட்டிகளில் எல்லாம் இதனை தெரிவித்திருக்கிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘பைரவா’, 2018 ஆம் ஆண்டு வெளியான ‘சர்கார்’ படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

குறிப்பாக, ’பைரவா’ படத்தில் ‘நில்லாயோ’, ‘அழகிய சூடான பூவே’ பாடல்களும், ‘சர்கார்’ படத்தில் ’ஓஎம்ஜி பொண்ணு’ பாடலும் சூப்பர் ஹிட் அடித்தது. இப்போதும், பலரின் ஃபேவரைட் பாடல்களாக உள்ளன. ஆனால், இந்த இரண்டு படத்தில் நடித்திருந்தாலும் கீர்த்தி சுரேஷுக்கு விஜய் படத்தில் பிடித்த பாடல் என்றால், ’யூத்’ படத்தின் ‘ஆல்தோட்ட பூபதி’ பாடல்தான். இதனை விஜய் பிறந்தநாளையொட்டி நேற்று ட்விட்டர் ஸ்பேசில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார்.

கடந்த வருடம் ‘மாஸ்டர்’ பட குட்டி ஸ்டோரி பாடலை வயலின் மூலம் வாசித்து விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ், இந்த வருடம் என்ன சர்ப்ரைஸ் கொடுக்கப்போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். நேற்று ட்விட்டர் ஸ்பேசில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி கேட்டதற்கும் ‘சர்ப்ரைஸ் இருக்கு. வெய்ட் பண்ணுங்க’ என்றார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில், இன்று விஜய் பிறந்தநாளுக்கு தனக்கு பிடித்தமான ‘ஆல்தோட்ட பூபதி’ பாடலுக்கே செம்ம உற்சாகமுடன் நடனமாடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

 அந்த நடனத்தைக் காண > Dancing for Aal Thotta Boopathy!